பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது மோடி அரசு: எஃப்andஓ முறைகேட்டை சுட்டிக்காட்டி ராகுல் சாடல்
புதுடெல்லி: பங்குச் சந்தை எஃப் அண்ட் ஓ (Futures and Options - F&O) வரத்தக முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, “பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் மோடி அரசு, சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்பில் தள்ளுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பங்குச் சந்தை எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தை 'பெரு நிறுவனங்களின் விளையாட்டு’ ஆக மாறிவிட்டது என்றும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் 2024-ஆம் ஆண்டிலேயே நான் தெளிவாகச் சொன்னேன். அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ஆயிரக்கணக்கான கோடிகளை மோசடி செய்துள்ளதாக தற்போது ‘செபி’ (SEBI) அமைப்பே ஒப்புக்கொள்கிறது. இவ்வளவு காலமாக சேன் ஏன் அமைதியாக இருந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

