இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஆனால் விரைவில் குறையும் என தகவல்..!

 

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, பத்து நாட்கள் தொடர் சரிவுக்கு பிறகு தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ₹40 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன்  தங்கத்தின் விலை ₹320 அதிகரித்துள்ளது. எனினும், வரும் நாட்களில் தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்பிருப்பதாக தங்க நகைக்கடைக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

தங்கம் விலை உயர்ந்த அதே வேளையில், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விபரங்கள் இதோ:

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,065

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,105

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,520

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,840

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,889

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,933

 

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,112

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  79,464

 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.121.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.121,000.00

 

Edited by Siva

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.