என் தந்தை கடவுள் மறுப்பாளர்; இந்தப் படத்தைப் பார்க்கும்போது...- கண்ணப்பா படம் குறித்து ராதிகா

மோகன் பாபு தயாரிப்பில் அவரின் மகன் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கண்ணப்பா’.

சென்னையில் நேற்று ( ஜூன் 30) ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டிருக்கிறது.

‘கண்ணப்பா’ படம்

இதில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படம் பார்த்திருக்கின்றனர்.

படம் பார்த்தப் பிறகு நடிகை ராதிகா பேட்டி அளித்திருக்கிறார். “முதலில் மோகன்பாபு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும். 

என் தந்தை கடவுள் மறுப்பாளர், ஒரு நாள் அவரிடம் நான், கடவுள் இருக்கிறாரா? என்று கேட்ட போது, நீ நினைப்பது தான், என்று சொன்னார். இந்தப் படத்தை பார்க்கும் போது எனக்கு அவர் நினைவு வந்தது.

ஆன்மிக படமாக இருந்தாலும் பக்தி என்றால் என்ன? என்பதை மிக அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

ராதிகா
ராதிகா

விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு அபாராமாக இருக்கிறது. திண்ணன் மற்றும் கண்ணப்பராக அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் என் கணவர் சரத்குமாரும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதெல்லாம் ஒரு தெய்வீகச் செயல் என்று என்னிடம் அவர் சொன்னார்.

நம்மை மீறி எதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இன்றைய சமுதாயத்திற்கு இந்தப் படம் உணர்த்தும்” என்று ‘கண்ணப்பா’ படம் குறித்து பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.