அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பும் இந்தியா: நிர்மலா சீதாராமன் தகவல்
புதுடெல்லி: அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவின் மிக முக்கிய மற்றும் முன்னணி வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. எனவே இந்தியா - அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வரும் 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய நமது இலக்குகளையும், லட்சியத்தையும் கருத்தில் கொண்டு உலகின் வலுவான பொருளாதாரங்களுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை செய்து முடிக்க தீவிரம் காட்ட வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

