வசிரிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதல்: இந்தியா மீது குற்றம் சுமத்தும் பாகிஸ்தான்

இஸ்லாமபாத்: ​பாகிஸ்​தானின் வடக்கு வசிரிஸ்​தான் மாவட்​டத்​தில் உள்ள கைபர் பக்​துன்​குவா பகு​தி​யில் நேற்று முன்​தினம் ராணுவத்​தினரின் வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன. அவற்​றின் மீது வெடிகுண்​டு​கள் ஏற்​றிவந்த வாக​னம் மோதி​ய​தில் பாக். ராணுவ வீரர்​கள் 16 பேர் உயி​ரிழந்​தனர்.

இத்​தாக்​குதலுக்கு தெக்​ரிக் - இ-தலி​பான் என்ற பாகிஸ்​தான் தலி​பான் அமைப்​பின் தற்​கொலைப்​படை பிரி​வான ஹபிஸ் குல் பகதூர் பொறுப்​பேற்​றது. ஆனால், பாகிஸ்​தானின் ராணுவம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘இந்​தி​யா​வின் ஆதரவு பெற்ற தீவிர​வா​தி​கள், வெடிகுண்டு வாக​னத்தை ராணுவத்​தினர் வாக​னங்​கள் மீது மோதி தாக்​குதல் நடத்​தினர்’’ என தெரி​வித்​துள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.