Poaching: குவியல் குவியலாக புள்ளிமான் சடலங்கள், துப்பாக்கிகள் - வனத்துறை அதிர்ச்சி; என்ன நடந்தது?

வன வளம் நிறைந்த தென்னிந்திய காடுகளில் வனக்குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனவிலங்கு வேட்டை நடைபெற்று வருகிறது. வேட்டைக் கும்பலை ஒழித்துக்கட்ட மும்மாநில வனத்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது. தோல், பல், நகம், இறைச்சி, மருத்துவ பயன்கள் என்கிற மூடநம்பிக்கை போன்ற பல காரணங்களுக்காக வனவிலங்குகளை வேட்டையாடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

வனவிலங்கு வேட்டை

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் கக்கலிபுரா வனச்சரகப் பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட வந்த கும்பலிடம் குவியல் குவியலாக புள்ளாமான் சடலங்கள், காட்டுப்பன்றி உடல், துப்பாக்கி, தோட்டாக்கள் போன்றவை இருந்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். கொடூரமாக வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர். அதிர்ச்சி பின்னணி குறித்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள், "‌‌ புள்ளிமான்கள்‌ மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடி வாகனத்தில் கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்றுமுன்தினம் இரவு பன்னார்கட்டா சாலை நைஸ் ரோடு‌ சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு வாகனங்களை சோதனை செய்ய முயற்சி செய்யும்போதே வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிரதாப் என்கிற ஒரு‌ இளைஞனை விரட்டிப்பிடித்து கைது செய்தோம். தப்பி ஓடிய மூன்று நபர்களை தனிக்குழு அமைத்து தேடி வருகிகறோம்.

வனவிலங்கு வேட்டை

4 புள்ளிமான் சடலங்கள், 74 கிலோ மான் இறைச்சி, 6 மான் தோல், வேட்டையாடப்பட்ட ஒரு காட்டுப்பன்றியின் உடல், ஒற்றை மற்றும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், கத்திகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளோம். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைச்சியை ரகசியமாக விற்பனை செய்து வந்த இந்த கும்பலை மொத்தமாக கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.