குடிபோதையில் ஸ்பூனை விழுங்கிய நபர்; கனவில் விழுங்கியதாக புலம்பல்.. எண்டோஸ்கோபி மூலம் அகற்றம்
தாய்லாந்தில் 29 வயதான நபரின் வயிற்றிலிருந்த கரண்டியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த கரண்டி எப்படி அவரது வயிற்றுக்குள் சென்றது என்று அவர் கூறும் காரணம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்து சேர்ந்த யாங் என்பவர் மது போதையில் பீங்கான் காபி ஸ்பூனை விழுங்கி இருக்கிறார். அதாவது மது அருந்தி கொண்டிருக்கும்போது ஹோட்டல் அறையில் இருந்த ஒரு கரண்டியை வாந்தி எடுக்க பயன்படுத்தியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அதனை அவர் விழுங்கியிருக்கிறார். மதுவினால் சுயநினைவு இழந்த போது இது நடந்திருக்கிறது.
ஆறு மாதம் கழித்து அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று யாங் பரிசோதனை செய்து பார்த்த போது அவரது வயிற்றில் 15 சென்டிமீட்டர் கரண்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாங் மருத்துவ பரிசோதனைக்கு பின் மருத்துவரிடம் ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்திருக்கிறார்.. ஸ்பூன் விழுங்கியதாக ஆறு மாதத்திற்கு முன்பு தான் கனவு கண்டதாகவும், அது கனவல்ல உண்மை என தற்போது புரிகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மதுவினால் சுயநினைவு இழந்த போது இது நடந்ததாகவும் அவர் கூறுகிறார். ஜூன் 18 அன்று அவருக்கு எண்டோஸ்கோபிக் எனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்பூன் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


