பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் மூவர் பலி; மன்னிப்பு கேட்ட ஒடிஷா முதல்வர்
இன்று (29.06.2025) ஒடிஷாவில் நடைபெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட நெருக்கடியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
பசந்தி சாஹு, பிரேமகாந்த் மொகந்தி மற்றும் பிரவதி தாஸ் ஆகிய மூவரும் மூச்சு திணறலால் உயிரிழந்ததாக சட்ட அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் கூறியுள்ளார். இந்த விவகாரம் ஆழமாக விசாரிக்கப்பட்டு, உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
3 dead, 10 injured in stampede during Jagannath Rath Yatra near Puris Gundicha Temple
— Indian Gems (@IndianGems_) June 29, 2025
Life of a common people is so cheap in our country
Please dont politicize it and dont ask any questions to the BJP government. pic.twitter.com/x3BH99ZusB
அதிகாலை நான்கு மணியளவில் பூரியில் உள்ள ஶ்ரீ கண்டிச்சா கோவில் அருகே, ரதத்தில் மூன்று தெய்வங்கள் திறக்கப்படும் நிகழ்ச்சியைக் காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அந்த தருணத்தில் புனிதமாக கருதப்படும் சாரமாலா மரத்தை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகள் நிகழ்ச்சி நடந்த இடத்தில் நுழைந்ததால் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குள் அனைவரையும் பயம் பீடித்துள்ளது.
அந்த இடத்தில் இருந்த ஒருவர் கூட்டத்தை சரியாக கையாளவில்லை என இந்துஸ்தான் டைம்ஸ் தளத்துக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். விஐபிகளுக்கு தனி நுழைவு வாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், பொது மக்கள் தூரத்தில் இருந்தே கோயிலை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மக்கள் உள் நுழையும் வாயில் வழியாக வெளியேற ஆரம்பித்ததால் நெரிசல் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பூரி டிசிபி பிஷ்ணு சரண் பதி மற்றும் போலீஸ் கமாண்டன்ட் அஜய் பதி ஆகியோரை இடைநீக்கம் செய்துள்ளார் முதலமைச்சர் மோகன் சரண் மாஜி. மேலும், பூரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் எஸ் ஸ்வைன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பினித் அகர்வால் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மோகன் சரண், இது பொருத்துக்கொள்ள முடியாத அலட்சியம் என்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு மாநில அரசு சார்பில் மன்னிப்புக் கேட்டதாகவும் பிடிஐ செய்திதளம் தெரிவிக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


