பாஜக: நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை: கைதான பிரதீப் உடன் தொடர்பு? - வினோஜ் P.செல்வம் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர்களுக்குத் போதைப் பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் பாஜக நிர்வாகி வினோஜ் P.செல்வத்துடன் இருக்கும் போட்டோ வைரலானது.

பிரதீப்புக்கு, வினோத்திற்குத் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தனது எக்ஸ் பக்கத்தில், வினோஜ் P.செல்வம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போதை மருந்து

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

"எனக்கு முன்பு நன்கு தெரிந்த ஒருவர், போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதாகி இருப்பது கடந்த மூன்று நாள்களாக எனக்கு மன வருத்தமாக இருக்கிறது. அவர் வெளிநாட்டில் படித்தவர்... மரியதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்... ஐ.டியில் பணியாற்றுபவர் ஆவார்.

இது மிகப்பெரிய பிரச்னை ஆகும். தமிழ்நாடு போதை மருந்துகளின் புகலிடமாக ஆவதற்கு முன், இதைச் சரி செய்ய வேண்டும்.

இதற்காக நான் தொடர்ந்து பேசிவருகிறேன்... பிரசாரங்கள் மேற்கொண்டு வருகிறேன். இந்தப் போதைப் பொருள்கள் குடும்பங்களைச் சீரழிப்பதோடு, இளைஞர்களைத் தவறான வழியில் நடத்துகிறது.

இது குறித்து அமைதி காப்பது மிகவும் ஆபத்தானது. இதைப் புறந்தள்ளி விடமுடியாது. இதை எதிர்த்து நாம் சண்டையிட வேண்டும்".

Today, 26th June, is the International Day Against Drug Abuse and Illicit Trafficking.

Last 3 days had been Disturbing to see someone I once knew—educated abroad, from a respectable family, with a IT career—now arrested in a drug trafficking case. This isn’t an isolated fall… pic.twitter.com/pK7EW9ZjUK

— Vinoj P Selvam (@VinojBJP) June 26, 2025

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.