தெலங்கானா: ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம் - தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி
தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
காவல்துறையினர் அந்த வீட்டைப் பரிசோதனை செய்தபோது தம்பதியினர் சட்டவிரோதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்களின் ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்ததாகவும் அவர்களின் வீடியோக்கள் தனிப்பட்ட முறையில் வேண்டுமென்றால் அதற்கான லிங்க்கை அனுப்புவதற்குப் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல் படி, இந்த சட்டவிரோத செயல் கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்துள்ளது. தம்பதியினர் தங்கள் வீடியோக்களைப் பல சமூக ஊடக தளங்களில் ரகசியமாக விளம்பரப்படுத்தினர்.
நிர்வாணம் மற்றும் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களுக்கு, ரூ. 500 முதல் ரூ. 2,000 வரையிலான கட்டணத்திற்கு விற்கப்பட்டுள்ளன.
அவர்களின் விளம்பர செய்திகளில், "நண்பர்களே எங்கள் வீடியோக்கள் வேண்டுமா? இங்கே காட்டப்பட்டுள்ள எண்ணுக்குப் பணம் செலுத்துங்கள் நாங்கள் உங்களுக்கு லிங்க்கை அனுப்புகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
காவல்துறையினர் கைதான தம்பதியினரின் வீட்டைச் சோதனை செய்வதில், வீட்டின் ஒரு பகுதி இதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து கேமராக்கள், மொபைல் போன்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தச் செயலில் ஈடுபட்ட தம்பதியினர் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் மற்றவர்களும் ஈடுபட்டுள்ளனரா அல்லது ஏதேனும் சர்வதேச தொடர்புகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


