``அரசியலமைப்புலிருந்து சோசலிஸ்ட், மதச்சார்பற்ற என்ற சொற்கள் நீக்க வேண்டும் - RSS பொதுச் செயலாளர்
ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுடன் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு புதன்கிழமை ஜூன் 25-ம் தேதி அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சம்விதான் ஹத்யா திவாஸ் என்ற நிகழ்வை ஒருங்கிணைத்தது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க, ஆர். எஸ். எஸ்யை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவசர நிலையின் போது நடந்தவை எனப் பல்வேறு செய்திகளை பேசிவருகின்றனர். நேற்று (ஜூன் 26) டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ``அவசரநிலையின் போது காங்கிரஸ் அரசால் முகவுரையில் சேர்க்கப்பட்ட சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற என்ற சொற்கள் நீடிக்க வேண்டுமா? அதை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அவசரநிலையை அமல்படுத்தியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படிப்பட்ட செயல்களைச் செய்தவர்கள் இன்று அரசியலமைப்பின் நகலுடன் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை. இதற்காக நீங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவசரநிலை நாட்களில் பெரிய அளவிலான கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சையும் நடந்தது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


