பறந்து போ: இந்தப் படத்தை நீதான் எடுத்தியானு ராம்கிட்ட கேட்டேன்; காரணம்... - நடிகர் சித்தார்த்
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பறந்து போ.
இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய சித்தார்த், “‘பறந்து போ’ எங்களுடைய படம்தான்.
ராமினுடைய எல்லா படங்களும் என்னுடைய படம். என்னுடைய எல்லா படங்களும் ராமிடைய படம்.
ராமினுடைய எல்லா படங்களையும் முதலில் பார்த்த அனுபவம் இருக்கிறது.
அவருடைய கதைகளை எல்லாம் புத்தகங்களாகப் படித்துவிடுவோம். ‘பறந்து போ’ படம் எடுத்து முடித்தப் பிறகு நீதான் இந்தப் படத்தை எடுத்தயா? என்று ராமிடம் கேட்டேன்.
அந்தளவிற்கு ஜாலியாக, சந்தோஷமாக இருந்தது. அப்படியான ஒரு படம்தான் ‘பறந்து போ’.
ராம் எப்போதும் மனிதாபிமானத்தையும், ஒரு விஷயத்தை ஆழமாக யோசித்தும் படமாக எடுப்பார். ஆனால் அது எதுவும் இந்தப் படத்தில் எட்டிப் பார்க்கவில்லை. ரொம்ப ஜாலியாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த எல்லோரும் சிறந்த நடிகர்கள்தான். எல்லோருக்கும் நன்றி.
ஜூலை 4 ஆம் தேதி என்னுடைய ‘3bhk’, ராமினுடைய ‘பறந்து போ’ இரண்டு படங்களையும் தியேட்டருக்கு வந்து பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


