Mahavatar Cinematic Universe: 2037 வரை 7 படங்கள்; ஹோம்பலே பட நிறுவனம் அறிவிப்பு; வெளியீடு எப்போது?

ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் ஆகியவை தங்கள் அனிமேஷன் தொடரான மஹாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் கான அப்டேட்டை வெளியிட்டுள்ளன.

10 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கப் போகும் இந்தத் தொடரின் முதல் பாகமான மஹாவதார் நரசிம்மர் வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த மஹாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்கான கடைசி படம் 2037 இல் மஹாவதார் கல்கி பாகம் 2 உடன் முடிவடையவுள்ளது. 

Mahavatar Cinematic Universe

மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்தப் படைப்புகள் தயாராகி வருகின்றன.

இந்தத் திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் மஹாவதார் நரசிம்மா (2025 ), மஹாவதார் பரசுராம் (2027 ), மஹாவதார் ரகுநந்தன் (2029 ), மஹாவதார் துவாரகாதீஷ் (2031 ), மஹாவதார் கோகுல நந்தா (2033 ), மஹாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 ), மஹாவதார் கல்கி பார்ட் 2 (2037) ஆகிய வரிசையில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

ஹோம்பாலே நிறுவனம் கே.ஜி.எஃப், காந்தாரா உள்ளிட்ட ஹிட்டான திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இயக்குநர் அஷ்வின் குமார் பேசுகையில், “க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாரத நாட்டின் பாரம்பரியத்தை இதுவரையில் அனுபவித்திராத வகையில் பெரிய திரைக்குக் கொண்டு வந்து, சினிமா அனுபவத்தைத் தருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

மஹாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் மூலம் தசாவதாரத்தின் வித்தியாசமான அனுபவம் இனிதே தொடங்குகிறது. இனி பாரதம் கர்ஜிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் அஷ்வின் குமார்
இயக்குநர் அஷ்வின் குமார்

இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷில்பா தவான் பேசுகையில், “எங்கள் கதைகள் திரையில் உயிர்பெற்றுக் கர்ஜிப்பதைக் காண நான் ஆவலாக இருக்கிறேன். ஒரு புதிய காவிய சினிமா அனுபவத்திற்கு அனைவரும் தயாராகுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இந்த யுனிவர்சின் முதல் திரைப்படமாக மஹாவதார் நரசிம்மா வெளியாக உள்ளது. ‘மகாவதார் நரசிம்மா’வை இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கியுள்ளார்.

இதனை க்ளீம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷில்பா தவான் -குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Mahavatar Cinematic Universe
Mahavatar Cinematic Universe

இந்தத் திரைப்படம் 3D எனப்படும் முப்பரிமான தொழில்நுட்பத்துடன், ஜூலை 25 ஆம் தேதியன்று ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. 

இந்த மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸுடன் காமிக்ஸ், வீடியோ கேம்ஸ், டிஜிட்டல் முறையிலான கதை சொல்லல் எனச் சேர்ந்து வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.