``Urine Eye Wash - வைரலாகும் பெண்ணின் பதிவு; ``கொடூரமானது - எச்சரிக்கும் மருத்துவர்

புனேயை சேர்ந்த நுபுர் என்ற பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் `Urine Eye Wash — Nature’s Own Medicine என்று தலைப்பிட்டு, "தினமும் காலையில் எனது ப்ரஸ்ஸான சிறுநீரில் கண்களை கழுவுவதால் கண்ணில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்ற பிரச்னையில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. இயற்கை மற்றும் மாற்று சிகிச்சைமுறை மீதான தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாக இதை பின்பற்றுகிறேன். மருந்து இல்லாமல் வாழ்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் இப்பதிவை ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆனால் அவரின் பதிவை பார்த்து நெட்டிசன்கள் அப்பெண்ணை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இது போன்ற செயல்களால் கண்ணில் தொற்று மற்றும் கடுமையான தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பிரபல கண் மருத்துவர் அபய் பிலிப்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அளித்துள்ள பதிலில், தயவு செய்து கண்ணில் சிறுநீரை விடாதீர்கள். அதனால் எந்த வித பயனும் கிடையாது. அவரின் செயல் கொடூரமானது. நீங்கள் சமூக ஊடகங்களில் பிரபலம் அடையவேண்டும் என்றால், அதற்கு இது வழி அல்ல, என்று குறிப்பிட்டுள்ளார். அப்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கும் சென்று தனது ஆலோசனையை டாக்டர் வழங்கி இருக்கிறார்.

"இந்த செயல் அருவருக்கத்தக்கது, மனித சிறுநீரில் 90% தண்ணீரும், எஞ்சிய பகுதி யூரியா, அமோனியா, உப்பு போன்றவை இருக்கும்" என்று கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், உடனடியாக மருத்துவரை சந்திக்கும்படி அப்பெண்ணிற்கு அறிவுரை கூறியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.