டி.ராஜேந்தர்: மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற எனக்கு, புதுப்பட வாய்ப்பு - நெகிழும் கிங்காங்
மகநடிகர் கிங் காங் எனத் திரையுலகில் பிரபலமாகியிருப்பவர் ஷங்கர் ஏழுமலை. கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரிலேயே திரையுலகில் பயணித்து வருகிறார்.
வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகளுக்கு வரும் ஜூலை 10ம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் MPK மஹாலில் திருமணம் நடைபெறுகிறது.
இதையொட்டி நடிகர் கிங்காங், திரையுலகில் இருப்பவர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் திருமண அழைப்பிதழ் வைத்து வருகிறார்.
அவ்வகையில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்திரனுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
அப்போது திருமண அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட டி.ராஜேந்திரன், "உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் என் படத்தில் நடித்ததில்லை. நான் படம் ஒண்ணு ஆரம்பிக்கிறேன்.
அதுல சின்ன கதாப்பாத்திரம் ஒண்ணு இருக்கு. அதுல நீங்க நடிக்கணும்" என்று தனது படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.
இதுகுறித்த காணொலியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகர் கிங்காங், "மகள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற எனக்கு, புதுப்பட வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குநர் டி.ராஜேந்தர்.
எனது மகள் கீர்த்தனா திருமண பத்திரிக்கையை இயக்குனர் டி.ராஜேந்தர் அவர்களிடம் அளித்தேன். பத்திரிக்கை வாங்கிக் கொண்ட டி.ஆர், தான் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். இரட்டை மகிழ்ச்சி" என்று நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


