Rolls Royce: 1 வயது மகளுக்கு ரூ.5 கோடிக்கு கார் பரிசு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒரு வயது மகளுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ஆடம்பர காரை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சதீஷ் சன்பால் தனது ஒரு வயது மகளுக்குச் சொகுசு கார் வழங்கி இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளார்.

இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்த Rolls Royce கார் அவரது மகளின் பெயரான இசபெல்லா என்ற பெயருடன் இடம்பெற்றுள்ளது.

Rolls Royce

தி சன் பத்திரிகையின் படி இந்த Rolls Royce கார் இங்கிலாந்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ. 5. 85 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலான வீடியோவின் படி, காரின் ஒவ்வொரு இருக்கையிலும், இசபெல்லா பெயரின் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. நம்பர் பிளேட்டும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் வாழ்த்துக்கள் இசபெல்லா என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த வீடியோதான் இணையத்தை வைரலாகி பலரும் இதற்குத் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சன்பால் தனது மகளுக்காக ஆடம்பரமாகச் செய்தது, இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு பிப்ரவரியில், இசபெல்லா பிறந்தவுடன் ​​துபாயின் விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஒன்றான அட்லாண்டிஸ் தி ராயலில் ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Isabella Satish Sanpal (@isabellasatishsanpal)

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.