3BHK: இந்த காலத்தில் சொந்த வீடு எதற்கு என்று நினைத்தேன்; ஆனால்... - நடிகர் சரத்குமார்
எட்டுத் தோட்டாக்கள் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 3BHK.
இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இதில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவி மோகன், டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்த், கொட்டுக்காளி வினோத்ராஜ், அயலான் ரவிக்குமார், அயலி முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் பேசியிருக்கும் நடிகர் சரத்குமார், "இந்தக் காலத்தில் சொந்த வீடெல்லாம் எதற்கு, எவ்வளவுபேர் அப்படி நினைக்கிறார்கள் என்றுதான் நான் நினைத்தேன். இப்படத்தின் கதை கேட்கும்போதும் படத்தை ஏற்றுக் கொள்வார்களா என்று இயக்குநரிடம் கேட்டேன். ஆனால், படம் பார்க்கம்போதுதான் சொந்த வீட்டின் அருமையை உணர்ந்தேன்.
வாழ்க்கையே ஒரு சவால் நிறைந்தது. அதை வென்றுகாட்டுவதுதான் வாழ்க்கை. அரசியலில் பிஸியாக இருந்தபோதும் படத்தில் நடித்தேன். நான் வானத்தில் இருந்து குதித்த நட்சத்திரம் கிடையாது. நானும் கஷ்டப்பட்டுத்தான் வந்தேன். சொந்தவீடு இல்லாமல் இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம்கூட கண்ணீர்விட்டதில்லை. ஆனால், இப்படம் பார்த்து கண்ணீர்விட்டேன்." என்று உணர்ச்சிவசத்துடன் பேசியிருக்கிறார்.
மேலும் தேவயானி குறித்து பேசியவர், "நாளை ஜூன் 27ம் தேதியோடு நானும் தேவயானியும் நடித்த சூர்யவம்சம் படம் வந்து 28 ஆண்டுகளாகிறது. அந்த நினைவுகளை என்றும் மறக்க முடியாது" என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


