Guru Mithreshiva: குரு மித்ரேஷிவாவின் நூல் வெளியீட்டு விழா! - நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

குரு மித்ரேஷிவா எழுதிய ‘பணவாசம்’, ‘கருவில் இருந்து குருவரை’, ‘உனக்குள் ஒரு ரகசியம்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டுவிழா வரும் ஜூன் 27 ஆம் தேதி  மாலை சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற இருக்கிறது.

இதில்  ‘பணத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் சம்பாதிக்கும் வழி!’ என்ற தலைப்பில் குரு மித்ரேஷிவா உரையாற்ற இருக்கிறார்.

இந்த நூல்கள் வெளியீட்டு விழாவில், தொழிலதிபர் திரு நல்லி குப்புசாமி தலைமை தாங்க திரு. சைலபதி (உதவி ஆசிரியர், விகடன்) வரவேற்புரை ஆற்றுகிறார். 

குரு மித்ரேஷிவாவின் நூல் வெளியீட்டு விழா

* ‘பண வாசம்’ நூலை  பொருளாதார நிபுணர் திரு.வ.நாகப்பன்  வெளியிட  நேச்சுரல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.சி.கே.குமரவேல், பெற்றுக்கொள்கிறார்.

* ‘கருவிலிருந்து குரு வரை’ நூலை திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட ஜோதிடர் திரு.கே.பி.வித்யாதரன் பெற்றுக்கொள்கிறார்.

*‘உனக்குள் ஒரு ரகசியம்’ நூலை திரைப்பட இயக்குநர் திரு. லிங்குசாமி வெளியிட பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் பெற்றுக்கொள்கிறார். இறுதியாக குரு மித்ரேஷிவா ஏற்புரை வழங்க திரு.முருகன்( ஆசிரியர், ஆனந்த விகடன்) நன்றியுரை ஆற்றுகிறார். 

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்களும் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு  முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

பதிவுக்கான லிங்க் - நூல் வெளியீட்டு விழா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.