தென்காசி: என் டிராக்டரை மீட்டுத் தாங்க - ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயி

தென்காசி மாவட்டம் குருவி குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மகன் யேசு ராஜன் (46). இவர் விவசாயம் செய்து வருகிறார்.

இவரிடமிருந்து. இவருக்குச் சொந்தமான டிராக்டரைக் கடந்த 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் மாதம் வாடகையாக ரூ.27 ஆயிரம் தருவதாகக் கூறி எடுத்துச் சென்றதாகவும், ஆனால், வாடகையைக் கொடுக்காமல், டிராக்டரை வேறு நபருக்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

ஜேசு ராஜன்

இது குறித்து யேசுராஜன் குருவிகுளம் காவல் நிலையம் மற்றும் கயத்தாறு காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு காவல் நிலையங்களும் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த யேசுராஜன் தனது வாழ்வாதாரமே பறிபோகி விட்டதாகக் கூறி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வருகை தந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஜேசு ராஜனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் காவல்துறையினர்
ஜேசு ராஜனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் காவல்துறையினர்

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் யேசு ராஜனிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனைப் பறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.