Shubhanshu Shukla: விண்வெளியில் தடம் பதிக்கப்போகும் 2வது இந்தியர்; விண்ணில் பாய்ந்தது ஃபால்கான் 9!
இந்தியாவைச் சேர்ந்த இரண்டாவது நபர் விண்வெளியில் கால் பதிக்கப் போகிறார். அவர் தான் சுபன்ஷு சுக்லா.
இவரையும், இவருடன் விண்வெளிக்குச் செல்லும் நான்கு பேர் கொண்ட குழுவைத் தாங்கிய ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் அமெரிக்காவின் ஃபோரிடாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது.
1984-ம் ஆண்டு ராகேஷ் சர்மா சோவியத்தின் இன்டர்கோஸ்மோஸ் திட்டத்தின் மூலம் சல்யுட் 7 விண்வெளி நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அதன் பிறகு, விண்வெளி செல்லும் இரண்டாவது இந்தியர் சுபன்ஷு சுக்லா. உத்திரபிரதேசத்தில் பிறந்த இவர், நான்கு பேர் கொண்ட குழுவுடன் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்தப் பயணம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. மே 29 முதல் பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு பின் தான், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது.
ஒத்திவைப்பு என்றால் இன்று கூட, சில தொழில்நுட்ப கோளாறினால், இந்த ராக்கெட் பயணம் ஒரு மணி நேரத்திற்கு பின் ஒத்திவைக்கப்பட்டது.
அது சரி செய்யப்பட்ட, ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, ஃப்ளோரிடாவின், கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.
சுபன்ஷு சுக்லா இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ககன்யான் திட்டத்தில் பணியாற்றுபவர் ஆவார்.
சுபன்ஷு சுக்லா செல்லும் திட்டத்திற்கு Axion 4 என்று பெயரிடப்பட்டுள்ளது.







இந்தக் குழு சர்வதேச விண்வெளி நிலையத்தை நாளை (ஜூன் 26) இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் சென்றடைவார்கள். அவர்கள் அங்கு 60 அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இதில் ஏழு ஆராய்ச்சிகள் இந்திய ஆராய்ச்சியாளர்களால் பரிந்துரைக்கப்பட்டவை ஆகும்.
வெறும் ஆராய்ச்சி செய்துவிட்டு மட்டும் சுக்லா பூமி திரும்பப்போவதில்லை. அவர் விண்வெளியில் இருந்துகொண்டு பூமியில் இருக்கும் வி.ஐ.பி ஒருவரிடமும் உரையாடப் போகிறார் என்பது கூடுதல் ஸ்பெஷல்.
வாழ்த்துகள் சுபன்ஷு சுக்லா... உங்கள் வெற்றி பல இந்தியர்களுக்கு பாதையாக மாறட்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


