பாமக: ``நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன் - அன்புமணி பிராத்தனைக்கு எம்எல்ஏ அருள் பதில்

பா.ம.க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகிய இருவரும் உடல் நலக்குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே “அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாகக் குணமடைய வேண்டும் உடல்ரீதியாக, மனரீதியாகக் குணமடைய வேண்டும் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்" என்று அன்புமணி கூறியிருந்தார்.

அருள், பா.ம.க எம்.எல்.ஏ

இந்நிலையில் இன்று (ஜூன் 25) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக எம்.எல்.ஏ அருளிடம் அன்புமணியின் கூட்டுப் பிராத்தனைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "நான் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறேன். அண்ணன் அன்புமணி நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நான் மருத்துவமனையில் அனுமதி ஆகவில்லை.

ஓமந்துரார் மருத்துவமனையில் எனது மருத்துவ பரிசோதனைக் குறிப்புகள் எல்லாம் இருக்கும். வேண்டுமானால் அதனைப் பாருங்கள். மன அழுத்தம் வேறொன்றும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.