சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட கிளர்ச்சிப் படையினர் கடந்த டிசம்பரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதன் பின்னர் இப்போதுதான் டமாஸ்கஸ் நகரில் முதல்முறையாக இந்த வகையிலான தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு அங்கு கிளர்ச்சிப் படையினரின் புரட்சி தொடங்கியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.