மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு ஈரான் குறி

டெஹ்ரான்: மத்​திய கிழக்​கில் அதி​கரித்து வரும் பதட்​டங்​களுக்கு மத்​தி​யில், ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலை ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலை​யங்​களை அமெரிக்க விமானப் படை தாக்​கியது. ஈரானின் ஃபோர்​டோ, நடான்ஸ் மற்​றும் இஸ்​பஹான் அணுசக்தி நிலை​யங்​கள் மீதான அமெரிக்க வான்​வழித் தாக்​குதலை தொடர்ந்து மேற்கு ஆசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு அமெரிக்க குடிமக​னும் அல்​லது ராணுவ வீரர்​களும் இப்​போது ஈரானின் இலக்​காக மாறி​யுள்​ளது என ஈரான் அரசு தொலைக்​காட்சி தெரி​வித்​துள்​ளது.

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனி​யின் நெருங்​கிய உதவி​யாளர் ஹொசைன் ஷரி​யத்​மதர் கூறுகை​யில், “ஈரானின் அணுசக்தி தளங்​கள் மீது அமெரிக்கா அத்​து​மீறி தாக்​ககுதல் நடத்​தி​யுள்​ளது. இதையடுத்​து, சிறிதும் தாம​திக்​காமல் உடனடி​யாக எதிர்த்​தாக்​குதல் நடத்த வியூ​கம் வகுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி மத்​திய கிழக்​கில் உள்ள முக்​கிய அமெரிக்க ராணுவத் தளங்​களை ஈரான் குறி​வைத்​துள்​ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்​படையை தாக்​க​வும், பிரிட்​டிஷ், ஜெர்​மனி, பிரெஞ்சு மற்​றும் அமெரிக்க கப்​பல்​களுக்கு ஹோர்​முஸ் ஜலசந்​தியை மூட​வும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.