குபேரா படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தன, ஆனால்..- ராஷ்மிகா மந்தனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி குபேரா  திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22) நடைபெற்றது.

குபேரா

அதில் கலந்துகொண்டு பேசிய ராஷ்மிகா மந்தனா, “  இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு எனக்கு மிகவும் பயமாக இருந்தது. புதிய கதாபாத்திரம், வித்தியாசமான படம்.

இந்தப் படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? ஓரிரு வருடங்கள் கழித்துதான் படம் வெளியாகும். அந்த சமயத்தில் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? என்று எனக்குள் நிறைய கேள்விகள் இருந்தன.

பிறகு சேகர் காரு எனக்கு கதை சொல்லும்போது, நான் எனக்குள் சொன்ன ஒரே விஷயம்  செட்டுக்கு போய் முழுமையாக சரணடைய வேண்டியதுதான் என்று சொல்லிக்கொண்டேன். சமீரா கதாபாத்திரம் வரவேற்பு கிடைத்ததற்கு டைரக்ஷன் டீமிற்கு நன்றி.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

நான் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தனுஷ் சாருக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேன். அவ்வளவு நன்றாக நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கவர்ந்திழுக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.