இந்தியா செல்லும் பெண்களே... - எச்சரித்த அமெரிக்கா; இது வெட்கக்கேடு - பாஜகவை சாடும் மனோ தங்கராஜ்
சமீபத்தில், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் அமெரிக்கர்களுக்கு, இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் மற்றும் தீவிரவாதம் குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தது.
இது இந்தியாவின் பெரும் அவமானம் என்று குறிப்பிட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது...
"பாஜக ஆட்சியின் பரிணாமம் = உலக அளவில் இந்தியாவுக்கு அவமானம்!
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்கா வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை பட்டியலில் இந்தியாவை Level 2 தரவரிசையில் சேர்த்து கீழ்காணும் வாசகத்தை பதிவிட்டுள்ளது:
அதாவது:-
"இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று பாலியல் வன்கொடுமை; பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடக்கின்றன" என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, "பயணிப்பவர் பெண்பாலினத்தவராக இருந்தால், தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
இது மிகப்பெரும் வெட்கக்கேடு. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் அவமானம், தலைகுனிவு.
பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை இந்தியாவை அனைத்து தளங்களிலும் பின்னோக்கி இழுத்து கொண்டு செல்கிறார். 15 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி நகரும்.
மத கலவரம், கலாசார செருக்கு, வெறுப்பு பேச்சு, வீண் விளம்பரங்கள் போன்ற முட்டாள்தனங்களுக்கு பாஜக அரசு செலுத்தும் அக்கறையை நாட்டின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் காண்பிக்க வேண்டும்".
பாஜக ஆட்சியின் பரிணாமம் = உலக அளவில் இந்தியாவுக்கு அவமானம்!
— Mano Thangaraj (@Manothangaraj) June 22, 2025
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்கா வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை பட்டியலில் இந்தியாவை Level 2 தரவரிசையில் சேர்த்து கீழ்காணும் வாசகத்தை பதிவிட்டுள்ளது:
அதாவது:-
"இந்தியாவில் வேகமாக… pic.twitter.com/jDw5QhyFax
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


