Samantha: ``ஐயோ, மீண்டும் வந்துவிட்டதா? - வைரலான மார்க் சீட்; சமந்தாவின் `கியூட் ரியாக்ஷன்!

நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அதே நேரம் சமந்தா பள்ளி காலத்தில் பெற்ற பாராட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குடும்ப சிக்கல், மன வருத்தங்கள், உடல் நலமின்மை எனப் பல்வேறு சவால்களை சமாளித்து இன்றும் அதே உற்சாகத்துடன் திரையுலகில் முத்திரை பதித்து வருகிறார் சமந்தா. அவர் தாண்டிய தடைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் பாராட்டும் நிலையில், அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் சமூக ஊடகத்தில் வெளியாகியிருக்கிறது.

சமந்தா மதிப்பெண் பட்டியல்

அனைத்துப் பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளியிலும் முதன்மை மாணவியாகவே வலம் வந்திருக்கிறார். அந்த சான்றிதழில் அவரின் ஆசிரியர் ஒருவர், அவள் பள்ளியின் சொத்து எனப் பாராட்டி எழுதியிருக்கிறார். அதை சமூக ஊடக வாசிகள் பலரும் குறிப்பிட்டு எழுதி வருகின்றனர். இந்தப் பதிவை பகிர்ந்திருந்த சமந்தா, ``இது மீண்டும் வந்துவிட்டதா... ஐயோ" என சிரித்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவுக்கு கீழே அவரின் ரசிகர்கள், தங்கள் பள்ளி காலங்களின் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.