ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு - நடந்தது என்ன?
டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
ஈரானிடம் 10-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயாரிக்க தேவையான யுரேனியம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஈரானிடம் உள்ள யுரேனியம் தற்போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. யுரேனியத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்டினால் அணுகுண்டுகளை தயாரிக்க முடியும். இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை பல மாதங்கள் நீடித்தும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


