Kubera: குபேரா படத்தில் ஹீரோ நான்தான்! - சக்சஸ் மீட்டில் நாகர்ஜூனா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது குபேரா. இந்தப் படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

Kubera

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஹைதராபாத்தில் இன்று இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாகார்ஜுனா பேசுகையில், "சேகர் கம்முலாவுக்கு தொடர்ந்து வெற்றிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அவருடைய அனைத்துப் படங்களின் வெளியீட்டிற்குப் பிறகும் இதே இடத்தில் வெற்றி விழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

நேற்று ஒருவர் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாகப் புகைப்படங்களைக் காட்டினார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சேகரும் நானும் இணைந்து படம் பண்ண வேண்டும் என நினைத்திருக்கிறோம். நாக சைதன்யாவே சேகருடன் இணைந்து படம் நடித்துவிட்டார்.

Kubera Success Meet
Kubera Success Meet

நாங்கள் இருவரும் படம் பண்ண வேண்டும் என சந்திக்கும்போதெல்லாம், ஒரு ஸ்டைலிஷ் படம் பண்ணலாம் என சேகர் கம்முலா சொல்வார். இப்போது, அற்புதமான கதாபாத்திரம் ஒன்றை எனக்குக் கொடுத்திருக்கிறார்.

மிஸ்ஸம்மா, குண்டம்மா படங்களைப் பார்த்தால், அப்படத்தின் ஹீரோவைத் தாண்டி இயக்குநர்கள்தான் நம் நினைவில் இருப்பார்கள். அதுபோல, குபேராவும் சேகர் கம்முலாவின் திரைப்படம்.

என்னைப் பற்றி யோசித்ததற்கு நன்றி, சேகர் சார். இந்தப் படத்தில் ஹீரோ நான்தான். குபேரா படத்தின் கதை என்னுடைய தீபக் கதாபாத்திரத்தைச் சுற்றியே நடக்கும்," எனப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.