2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?
பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்த ஒரு நில விற்பனை தற்போது சட்ட பிரச்சனையாக மாறி உள்ளது.
2006-ஆம் ஆண்டு நிலத்தை விற்றவரின் மகள், தனது அனுமதியின்றி சொத்து விற்கப்பட்டதாக கூறி தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து reddit இல் நிலத்தை வாங்கியவர் கூறுகையில், ”விற்பனையாளர் நேரடியாக அந்த நிலத்தை விற்றார். வேறு வில்லங்கம் எதுவும் இல்லை.
19 ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தவரின் மகள், விற்பனைக்கு முன்பு தன்னிடம் கேட்கப்படவில்லை. எனவே அதற்கு இழப்பீடு வேண்டும் என்று அந்த பெண் கோருகிறார்.
தனது மகளின் திருமண ஏற்பாட்டிற்காக தான் நிலத்தை விற்பதாக ஏற்கனவே நிலத்தை விற்றவர் கூறியதாக தற்போதைய உரிமையாளர் கூறுகிறார்.
விற்பனையாளரின் மகன் ஆரம்பத்தில் இது ஒரு குடும்ப விஷயம் என்றும், சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளப்படும் என்றும் கூறினார். ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினால் என்ன செய்வது என்ற பல மன குழப்பத்தில் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இது பரம்பரை சொத்தா அல்லது தந்தையின் சுய சம்பாத்தியத்தில் இருந்து மகள் பங்கு கேட்கிறாரா என்பது குறித்த தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


