நீதிபதி வீட்டில் சிக்கிய பணம்; அமித் ஷாவிடம் முதலில் தகவலை சொன்ன டெல்லி காவல்துறை’ - வெளியான தகவல்

கடந்த மார்ச் மாதம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீயணைப்பு முடிந்ததும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டான பாதி எரிந்த பணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சம்பவம் நடந்த சமயத்தில், யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லை. அதற்கடுத்த நாள், டெல்லி திரும்பிய யஷ்வந்த் வர்மா, பணம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட அறை அவரது நீதிபதி குடியிருப்பில் இருக்கும் அனைவரும் பயன்படுத்தப்படும் ஒரு அறை. அது பயன்படுத்ததாத நாற்காலிகள், பாட்டில்கள், பாத்திரங்கள், தோட்டக் கருவிகள் ஆகியவற்றை போட்டு வைக்கும் அறை.

அமித்ஷா

அந்த அறைக்கு குடியிருப்பில் இருக்கும் அனைவரும் வந்துப்போக முடியும். அது என்னுடைய வீட்டின் அறை அல்ல" என்று டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு விளக்கக் கடிதம் கொடுத்தார்.

இருந்தும், அவரை அவரது சொந்த மாநிலமான அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணிமாற்றல் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், ஊழல் செய்தவரை எங்கள் நீதிமன்றத்திற்கு மாற்றுவதா? என்று இந்த முடிவிற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தது.

இன்னொரு பக்கம், அந்த அறை யஷ்வந்த் வர்மா வீட்டின் அறை தான் என்று விசாரணையில் உறுதியானது. மேலும், பாதி எரிந்த பணம் உடனடியாக அகற்றப்பட்டது, யஷ்வந்த் வர்மாவின் மகள் முன்னுக்கு பின் முரணான தகவல் என அனைத்துமே யஷ்வந்த் வர்மாவிற்கு எதிராக இருக்கிறது.

இவரை உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நீக்க பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதி எரிந்த பணக் கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதும், இது குறித்த தகவலை சில மணிநேரத்திலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் டெல்லி காவல்துறை அணையர் சஞ்சய் அரோரா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.