டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?
டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தாக மாறியுள்ளது. டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் இந்த போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது டெல்லி மெட்ரோ ரயிலின் வீடியோ ஏதோ ஒரு காரணம் கொண்டு இணையத்தில் வைரலாகும்.
இந்த நிலையில் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் இதனைக் கண்டு பயணிகள் சத்தமிடுவதை குறிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
சம்பவம் நடந்த மெட்ரோ வழித்தடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததையடுத்து, வைரலானது.
மெட்ரோ வீடியோ வைரலானதை அடுத்து டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்(DMRC) இதனை ஆய்வு செய்தபோது அங்கு ஒரு குட்டி பல்லி என்று கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
DMRC-யின் முதன்மை நிர்வாக இயக்குநர் அனுஜ் தயாள் இதுகுறித்து கூறுகையில் ”வைரலான வீடியோவில் பாம்பு காணப்படவில்லை இருப்பினும் பெண்கள் பெட்டியில் பாம்பு காணப்பட்டதாக எங்களுக்கு ஒரு எச்சரிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது
அக்ஷர்தாம் மெட்ரோ நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டு ஆய்வுக்காக டிப்போவிற்கு அனுப்பப்பட்டது.
சம்பந்தப்பட்ட குழு ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தபோது அங்கு எந்த பாம்பும் கண்டுபிடிக்கப்படவில்லை மாறாக ஆய்வின் போது ஒரு குட்டி பல்லி மட்டும் இருந்தது” என்று அவர் கூறினார்.
View this post on InstagramA post shared by Keerty Chauhan (@chauhankeerty)
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


