Anupama: மலையாள சினிமாவில் விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் - அனுபமா வருத்தம்

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள Janaki vs State Of Kerala திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிறது.

இதையொட்டி நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், "எனக்கு நடிக்கத் தெரியாது என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள்" என்று தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து மிகுந்த வருத்தத்துடன் பேசியிருந்தார் நடிகை அனுபமா பரவேஸ்வரன்.

சிம்ரன், அனுபமா, நயன்தாரா

அதற்கு நடிகர் சுரேஷ் கோபி, "இது மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பிரச்னை. சிம்ரன், நயன்தாரா, அசின் இங்கு வந்தபோது இதேபோலத்தான் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.

இது மலையாள சினிமாவின் பிரச்னை" என்று அனுபமாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இது திரையுலகில் பேசுபொருளாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அனுபமா பரவேஸ்வரன், "மலையாள சினிமாவில் என்மீது அதிகமாக விமர்சனங்கள் இருக்கின்றன. அதனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மைதான். என் படங்களை என் அம்மா, அப்பா பார்க்கிறார்கள்.

அனுபமா பரமேஸ்வரன், சுரேஷ் கோபி
அனுபமா பரமேஸ்வரன், சுரேஷ் கோபி

அதனால் கவனத்துடன் எனக்குப் பொருந்துகிற கதை, கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். படத்தைப் பார்ப்பவர்கள் என் நடிப்புப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனித்துப் பார்ப்பேன்.

இப்போது எனக்கு நல்ல நல்ல கதைகள் வருகின்றன. ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு படத்தில் கமிட்டாகியிருக்கிறேன். பல தடைகள் வந்தாலும், மலையாள சினிமாவில் பணியாற்றுவது எனக்குப் பிடித்திருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.