அதை சொல்வதற்கு நான் யார்? - கூட்டணி குறித்த திருமாவின் கருத்துக்கு ராமதாஸின் பதில்
பாமக, பாஜக எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணியில் நாங்கள் இணையமாட்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இதனிடையே பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் ஜி.கே மணி ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவமும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் திருமாவளவனின் கருத்து தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின்போது ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
.jpeg)
அதற்கு பதிலளித்த அவர், “அது அவருடைய கருத்து. அவருடைய கொள்கை. அதில் கருத்து சொல்வதற்கு நான் யார்?.. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, கொள்கை, முரண்பாடு, ஈர்ப்பு உள்ளிட்டவை இருக்கும். அதற்கு நாம் கருத்து சொல்ல வேண்டியதில்லை” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


