அவரது பெயர் நீடித்து நிலைக்க என்னால் முடிந்ததை செய்கிறேன்- பட்டோடி குடும்பத்திடம் பேசிய சச்சின்

சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் கௌரவம் அளிக்கும் வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான அறிமுக விழா லண்டனில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் - சச்சின் டெண்டுல்கர்

இதற்கு முன் இந்த கோப்பை பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டோடியின் பெயரை நீக்குவது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் நீடித்து வந்தன. இந்திய அணிக்கு பட்டோடி குடும்பத்தின் இரண்டு பேர் கேப்டனாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பட்டோடி குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசியதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடருக்கு பட்டோடி கோப்பை என்ற பெயரை மாற்றி ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை என பெயர் வைக்கப்போவதாக முடிவு செய்யப்பட்டதும் நான் முதலில் அழைத்தது பட்டோடியின் குடும்பத்தினரைத்தான்.

 பட்டோடி
பட்டோடி

அவர்களிடம் இந்த தகவலைத் தெரிவித்து, பட்டோடியின் பெயர் இதில் நீடித்து நிலைக்க என்னால் முடிந்ததை செய்கிறேன் எனச் சொன்னேன். அதற்குப் பின் ஜெய் ஷா, பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் என்னுடைய யோசனையை கூறினேன். அவர்களும் பட்டோடியின் புகழ் நிலைத்து நிற்க அதனை மனதார ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவாக, கோப்பை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடியின் பெயரில் பதக்கம் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.