UPSC, TNPSC, ரெயில்வே..! பாடங்கள், காணொளி, குறிப்புகள் வழங்கும் தமிழ்நாடு அரசு; முற்றிலும் இலவசம்!
அரசு வேலை - எப்போதுமே இந்த வேலைக்கு தனி மவுசு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பேர் இந்த வேலையைப் பெற போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால், அனைவராலும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியாது. காரணம், இந்தத் தேர்வு அவ்வளவு எளிதானவை அல்ல.
இதை எளிதாக்க...
TNPSC, SSC, IBPS, RRB, UPSC ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், மென்பாடக்குறிப்புகள், காணோளி வகுப்புகள், ஒலிப்பாடக்குறிப்புகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தினசரி நடப்பு நிகழ்வுகள், மைன்ட் மேப்புகள் இலவசமாக tamilnaducareerservices.tn.gov.in என்ற வலைத்தளத்தில் கிடைக்கின்றன. இதை தமிழ்நாடு அரசே வழங்குகின்றன.
முற்றிலும் இலவசம்!
இதற்கு காசு உண்டா? என்ற கேள்வி எழலாம். இது முழுக்க முழுக்க இலவச வலைதளம். இதுவரை இந்த வலைதளம் மூலம் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது.
ஆக, போட்டித்தேர்வில் வெற்றிப்பெற இனி தேடி தேடி படிக்க வேண்டாம். சில கிளிக்குகள் மட்டும் போதும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


