ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்பவம்.. வைரல் காட்சி!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலத்தில், ஒருவர் ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தின் பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலாகும் வீடியோவில் சவாரி செய்பவர் ஆபத்தான முறையில் முன்னும் பின்னுமாக நகர்கிறார்.

விலங்கு சாலையின் விளிம்பிற்கு அருகில் சென்றதும், ஒட்டகத்தின் மீது சவாரி செய்யும் நபர் நிதானத்தில் இல்லாததை அறிந்து கொண்டு பின்னால் காரில் வந்தவர் தடுக்க முயற்சி செய்துள்ளார்.

ஷா என்ற நபர் தனது காரில் ஒட்டகத்தை பின்தொடர்ந்து, அந்த நபரை நிறுத்துமாறு பலமுறை கத்தினார். ஒட்டகத்திற்கு வழியை விடுவிக்குமாறு அருகில் சென்ற ஓட்டுநர்களையும் எச்சரித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தனது instagram பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஷா, "பி.வி. நரசிம்ம ராவ் மேம்பாலத்தில் இவ்வாறு ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்யப்பட்டது. பொதுமக்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது, கடவுளின் அருளால் நான் உள்ளே நுழைந்து அதைத் தடுக்க முடிந்தது. மக்கள் இதை ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே பார்த்தது வருத்தமளிக்கிறது. இவ்வாறு செயல்பட அல்லாஹ் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Ikram Ullah Shah (@ikshorts)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.