இந்தியா - பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப் - பின்னணி என்ன?
வாஷிங்டன்: ‘இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்துக்கு நான்தான் காரணம்’ என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல்முறையாக ‘இரு நாட்டு தலைவர்களே போர் நிறுத்தத்துக்கு காரணம். இதில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை’ என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் மே 7-ம் தேதி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்தது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டை மே 10-ம் தேதி முடிவுக்கு வந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


