SpaceX: பரிசோதனையில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்; ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் | Viral Video
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசா மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பல முக்கியப் பணிகளைச் செய்துவருகின்றது.
குறிப்பாக, ஸ்பேஸ் எக்ஸ் உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் விமானத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
அவ்வகையில் ஸ்பேஸ் எக்ஸ், உருவாக்கிய ஸ்டார்ஷிப் விண்கலம் 36 ராக்கெட் நேற்று (ஜூன் 18) பரிசோதனைக்காக இயக்கப்பட்டது.
ஆனால், தொடக்க இயக்கத்திலேயே டெக்சாஸின் ஸ்டார்பேஸ் விண்கலம் சோதனை தளத்தில் இரவு 11:01 மணியளவில் வெடித்துச் சிதறியிருக்கிறது.
சோதனை இயக்கம் என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் இச்சோதனை நடத்தப்பட்டதால் இந்த ராக்கெட் வெடிப்பில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஸ்பேஸ் எக்ஸ் விளக்கமளித்திருக்கிறது.
ராக்கெட் இயக்க ஆரம்பித்த சில நொடிகளில் ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து மின்னல் ஒளிபோல மின்னி பெருவெடிப்பாக வெடித்துச் சிதறும் காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சந்திரன் மற்றும் செவ்வாய்க்குப் பயணம், மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது போன்ற ஆராய்ச்சிகள் தொடர்பாகப் பணியாற்றிவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு இது பெரும் பின்னடைவாகியிருக்கிறது.
ANOMALY! Just before Ship 36 was set to Static Fire, it blew up at SpaceX Masseys!
— NSF - NASASpaceflight.com (@NASASpaceflight) June 19, 2025
Live on X and YT: https://t.co/GPjZIX1Zyd pic.twitter.com/CfZhDeSGae
இதுகுறித்து அந்நிறுவனம், "பின்னடைவுகள் இருந்தபோதிலும், நிறுவனம் வேகமான வளர்ச்சியுடனும், தொடர்ச்சியான சோதனைகளுடனும் முன்னேறி வருகிறது.
நாங்கள் ஒவ்வொரு தோல்வியையும் ஒரு கற்றல் வாய்ப்பாகக் கருதுகிறோம். இந்த வெடிப்புச் சம்பவம், புதிய விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இருக்கும் அபாயங்களைக் காட்டுகிறது.
இருப்பினும், ஸ்டார்ஷிப்பின் வெற்றி விண்வெளிப் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும். பூமிக்கு அப்பால் மனிதர்களையும் சரக்குகளையும் கொண்டு செல்லக்கூடிய விண்கலத்தை உருவாக்குவோம்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


