Suriya: சூர்யாவின் 50-வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்... நாளை சூர்யா 45 டைட்டில்!

சூர்யா, வெங்கி அட்லூரியின் கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா 46 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சூர்யாவின் முந்தைய படமான சூர்யா 45 படத்தின் அப்டேட் ஒன்று நாளை வெளியாகிறது.

suriya 46

டைட்டில் அப்டேட்

ரெட்ரோ படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் அடுத்து திரைக்கு வரும் படமாக சூர்யா 45 படம் உள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, யோகிபாபு, நட்டி நட்ராஜ், லப்பர் பந்து சுவாஸ்விகா, நெடுஞ்சாலை ஷிவதா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் என பலரும் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு, சாய் அபயங்கர் இசை என புதுக்கூட்டணியுடன் சூர்யா கைகோர்த்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் அப்டேட் சூர்யாவின் பிறந்த நாளின் போது வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது சின்ன மாற்றம். படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாள் ஜூன் 20ம் தேதி வருகிறது. அதாவது நாளை ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாள் என்பதால் படத்தின் டைட்டில் வெளியாகிறது. மற்றபடி டீசரோ, ட்ரெய்லரோ ரிலீஸ் தேதி முடிவான பின்னர் தான் வெளியாகும் என்கிறார்கள்.

சூர்யா

சூர்யா 45யின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் டீசர் ஒன்றை ரெடி செய்யும் பணிகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கின்றன. சூர்யாவின் பிறந்தநாள் அடுத்த மாதம் 23ம் தேதி வருகிறது. அன்று படத்தின் டைட்டில் வெளியாகும் என்ற நிலையில் தான் இப்போது முன்கூட்டியே ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாள் ட்ரீட் ஆக அப்டேட் வருகிறது. கருப்பு அல்லது பேட்டை கருப்பு ஆகிய டைட்டில்கள் பரிசீலிக்கபட்டிருக்கிறது.

50வது பிறந்த நாள்

வரும் பிறந்தநாள் சூர்யாவின் 50வது பிறந்த நாள் என்பதால், அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர். ரத்ததான முகாம், அன்னதானம், வேலை வாய்ப்பு முகாம்கள் என பல்வேறு நலப்பணிகளை செய்ய உள்ளனர். சூர்யா 45 படத்திலிருந்து டீசரோ அல்லது சிங்கிளோ வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அயன் படத்தின் தெலுங்கு வெர்ஷனான வீடோக்கடே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகிறது. 4கே தொழில்நுட்பத்தில் கொண்டு வருகின்றனர்.

அயன்

இதற்கிடையே வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் ஹைதரபாத்தில் சீறிப்பாய்ந்து போய்க்கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த இதன் படப்பூஜை, சூர்யாவின் வேண்டுகோளின்படி பழனியிலும் எளிமையான முறையில் நடந்தது நினைவிருக்கலாம்.

இந்த படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீணா டாண்டன், ராதிகா, காளி வெங்கட் என பலரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய இதன் முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நீடிக்கும்.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.