கைலாசா எங்கு உள்ளது? எப்படிச் செல்வது? - நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கேள்வி
"கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா?" என நித்யானந்தா வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தைச் சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர், "நான் பக்தராக மதுரை ஆதினம் மடத்திற்குள் நுழையத் தடைவிதிக்கக் கூடாது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனப் பல ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "மனுதாரர் எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா?" என்று நித்யானந்த தரப்பினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
அப்போது நித்யானந்தா சீடர் அரச்சனா என்பவர், "ஆஸ்திரேலியா அருகில் உள்ள யூ.எஸ்.கே என்ற தனி நாட்டில் உள்ளார். அந்த நாட்டிற்கு ஐ.நா., அங்கீகாரம் உள்ளது" என்றவர், தங்கள் தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து, வழக்கறிஞரை மாற்றுவதற்கு அனுமதி வழங்கி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


