இஸ்ரேல் - ஈரான் தாக்குதலை நிறுத்த முன்வந்த புதின்; ட்ரம்ப் கேட்ட உதவி - அமெரிக்கா, ரஷ்யா முரண்!
இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் தொடங்கி ஆறு நாள்கள் ஆகிறது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலும் விட்டுக்கொடுப்பதாக இல்லை... ஈரானும் விட்டுக்கொடுப்பதாக இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 17) ட்ரம்ப் மற்றும் புதின் தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது புதின், இஸ்ரேல், ஈரான் இடையே தான் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறியுள்ளார்.
ஆனால், ட்ரம்ப், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். உங்கள் பிரச்னையை முதலில் மத்தியஸ்தம் செய்யுங்கள். பின்னர் நீங்கள் இது குறித்து வருத்தப்படலாம்" என்று கூறியிருக்கிறார். இந்தப் போன்கால் குறித்து ட்ரம்பே நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்தப் போன்கால் குறித்து ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், அவர் உருவகமாக பேசியுள்ளார். சில நாள்களுக்கு முன்பு பேசியது, நேற்று பேசியது போல இருக்கிறது. அந்தளவிற்கு வாழ்க்கை பிசியாக செல்கிறது" என்று பேசியிருக்கிறார். இது உண்மையிலேயே ட்ரம்ப் - புதின் தொலைபேசி அழைப்பு நிகழ்ந்ததா? என்கிற முரண் எழுந்து சந்தேகத்தை கிளப்புகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


