Sahitya Akademi Awards: விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார், லக்‌ஷிமிகருக்கு யுவ புரஸ்கார்!

சாகித்திய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருது மற்றும் பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில் இந்த 2025 ஆண்டுக்கான சாகித்திய பால புரஸ்கார் விருது தமிழ் மொழியில், ஒற்றைச் சிறகு ஒவியா என்ற நாவலுக்காக விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விகடன் குழுமத்தில் பணிபுரிந்த இவர் கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதி வருபவர்.

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்

வாத்து ராஜா, கதைகதையாம் காரணமாம், வானத்துடன் டூ, வித்தைக்காரச் சிறுமி, நீலப்பூ, கயிறு உள்ளிட்ட கதைகளை எழுதியிருக்கிறார்.

சிறார்கள், இளையோரிடையே சாதி, ஏற்றத் தாழ்வுகள், சமத்துவம், சமூகம் குறித்து விழிப்புணர்வையும், கலந்துரையாடலையும் எழுத்தின் வழியே நிகழ்த்துவதில் தொடர்ந்துப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

தமிழ் மொழி பிரிவில் 2025ம் ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருதை எழுத்தாளர் லக்‌ஷிமிகருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. kuttonru kutirru சிறுகதைக்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

vikatan play audio books

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.