கணவனுக்கும் மனைவிக்கும் இது தெரிந்தால் விவாகரத்து நிகழாது - காமத்துக்கு மரியாதை - 245
ஒரு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுடைய தாம்பத்திய உறவு எப்படி இருக்க வேண்டும்; திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா..? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
இன்றைக்கு இளம் வயதில் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்கு வருபவர்களில் பலரும், தாம்பத்திய வாழ்க்கையில் சரியான இன்பத்தை அனுபவிக்காதவர்களாக இருக்கிறார்கள். அஃப்கோர்ஸ் இந்தப் பிரச்னை காரணமாகத்தான், அவர்கள் விவாகரத்தையே நாடுகிறார்கள்.
ஒரு திருமணத்தில் கணவனும் சரி, மனைவியும் சரி, ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக தெரிந்துகொண்டுதான் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பேன் நான். தன் மனைவியை எப்படி திருப்திப்படுத்துவது என்று கணவனுக்கும், உறவின்போது கணவனை எப்படித்தூண்ட வேண்டும் என மனைவிக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான மருத்துவர்களின் வீடியோக்களைப் பார்த்து அல்லது செக்ஸாலஜிஸ்ட்டின் ஆலோசனைப் பெற்று இதைத் தெரிந்துகொள்ளலாம். காமசூத்ரா எழுதிய மண்ணில் இந்த நிலைமை வந்ததற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது என்றாலும், இதுதான் இன்றைய யதார்த்தம்.

விந்து வெளியேற்றினாலே ஆண் ஆர்கசம் அடைந்து விடுவான். ஆனால், பெண் நிலைமை அப்படிக் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். பெண்கள் ஆர்கசம் அடைய 14 நிமிடங்கள் வரை ஆகும். அதுவரை எந்தெந்த உடல் பாகங்களைத்தொட்டால் அவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தப்பகுதிகளைக் கணவன் தூண்ட வேண்டும். இதையே தான் மனைவியும் கணவனுக்கு செய்ய வேண்டும். தாம்பத்திய உறவு என்பது நீ பாதி நான் பாதி ஷேரிங் தான். அதனால், நான் ஏதாவது செய்தால் கணவர் தப்பாக நினைத்துக்கொள்வாரோ என்று எண்ணாமல் செக்ஸை எப்படி சுவாரஸ்யமாக கொண்டு செல்லவேண்டும் என மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஆண்களும் மார்பைத்தொட்டால் உணர்வெழுச்சி அடைவார்கள் என்றவர் தொடர்ந்தார்.
திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா என்றால், அது பாதுகாப்பானது என்றே சொல்வேன் நான். இன்றைக்கு செக்ஸ் டூரிசம் அதிகமாகி விட்டது. எங்கே போனாலும் மசாஜ் பார்லர், அங்கே ஹேப்பி எண்டிங் என உறவுகொள்கிற வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. இந்த வாய்ப்புகளை அனுபவித்தவர்கள், திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய்கள் இருக்கின்றனவா என பரிசோதித்துக்கொள்வது நல்லது என்கிறார் டாக்டர் காமராஜ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

