யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான் - திண்டுக்கல் லியோனி
வருகிற ஜுன் 22 ஆம் தேதி மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்திற்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது முருகனுக்கே நன்றாகத் தெரியும்!
இந்நிலையில் இந்த மாநாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் திண்டுக்கல் ஐ.லியோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் தலைமையில் நடந்ததுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு.
அதில் ஆதினம், நீதியரசர்கள், வெளிநாட்டில் இருக்கக்கூடிய பக்தர்கள் எல்லோரும் கலந்துகொண்டார்கள். தற்போது நடைபெறவுள்ள மாநாடைப் பொறுத்தவரைக்கும் முருகனை அரசியலாக்கி, ஓட்டுக்காக நடத்தப்படுகின்ற மாநாடு இது. இது முருகனுக்கே நன்றாகத் தெரியும்.
அதனால் இந்த மாநாடு திட்டமிட்டு மத வெறியைப் பரப்புவதற்காக நடத்தப்படுகின்ற மாநாடு என்பது பொதுமக்களுக்கு தெரியும். அதனால் இதை பொதுமக்களே புறக்கணிப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து எடப்பாடி குறித்து பேசிய அவர், “ திமுக கூட்டணிக்கு சிக்கல் வந்திருக்கிறது என்று தேவையில்லாமல் பேசுகிறார். ஆனால் திமுக கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு விரிசலும் திமுகவில் இல்லை. அது எடப்பாடியினுடைய கற்பனை.
அவர்தான் அமித் ஷாவின் மாயவலையில் சிக்கி வேதனையில் இருக்கிறார். யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான்” என்று எடப்பாடியை விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


