Kuberaa: தனுஷின் குபேரா படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்; CBFC நடவடிக்கை

தனுஷின் நடிப்பில் ஜூன் 20-ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’வில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேகர் கமுலா இயக்கியுள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரையரங்குக்கு வருவதற்கு முன்பு இந்தப் படம் Central Board of Film Certification (CBFC) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்ற பல காட்சிகள் வெட்டப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

குபேரா

ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, ``ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, ``குபேரன் படத்தின் 19 காட்சிகள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட காட்சிகளின் மொத்த நீளம் 13 நிமிடங்கள் 41 விநாடிகள். நீக்கப்பட்ட காட்சிகளில் தனுஷ் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்தக் காட்சிகள்தான் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜுனா மூவரும் ஒரு டாக்ஸியில் பயணிப்பது போன்ற நீண்டக் காட்சியும், ஜிம் சர்ப் நடித்த சில காட்சிகளும் நீக்கப்பட்டிருக்கிறது." எனத் தெரிவித்திருக்கிறது. குபேராவின் OTT உரிமைகளை அமேசான் பிரைம் வாங்கியிருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.