Toll Tag Pass: அறிமுகமாகும் ரூ.3,000 வருடாந்திர ஃபாஸ்ட் டேக் பாஸ்; எப்போது? யார், யார் பெறலாம்?

டோல் கேட் - தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு மிகப்பெரிய சிரமம் என்றே சொல்லலாம். வரிசையில் காத்திருந்து, டோலைக் கட்டி செல்வதற்குள் போதும்... போதும் என்று ஆகிவிடும்.

இதை எளிதாக்கும் விதமாக, ஃபாஸ்ட் டேக் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை இன்னும் எளிதாக்கும் விதமாக ஃபாஸ்ட் டேக் பாஸ் வர உள்ளது.

இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது...

"தொந்தரவு இல்லாத நெடுஞ்சாலைப் பயணத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக, ரூ.3,000 மதிப்பில் ஃபாஸ்ட் டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்துகிறோம். இது ஆகஸ்ட் 15, 2025 முதல் அமலுக்கு வரும்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்த பாஸை ஒரு வருடத்திற்கு அல்லது 200 டிரிப் வரைக்கும் பயன்படுத்தலாம். எது முதலில் வருகிறதோ, அதன் அடிப்படையில். இந்தப் பாஸ் முழுக்க முழுக்க வணிக ரீதி அல்லாத கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்குச் செல்லுபடியாகும்.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை மேற்கொள்ள இந்த வருடாந்திர பாஸ் உதவும்.

இந்தப் பாஸைப் பெற பிரத்யேக லிங்க் விரைவில் ராஜ்மார்க் யாத்ரா செயலியிலும், NHAI மற்றும் MoRTH வலைத்தளங்களில் கொடுக்கப்படும்.

இது 60 கி.மீ வரம்பிற்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான நீண்ட கால புகார்களை நிவர்த்தி செய்யும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் காத்திருப்பு நேரத்தையும், நெரிசலையும், டோல் பிளாசாக்களில் ஏற்படும் பிரச்னைகளையும் குறைக்கலாம். இந்த வருடாந்திர பாஸ் மூலம் மில்லியன் கணக்கான தனியார் ஓட்டுநர்களுக்கு விரைவான மற்றும் ஸ்மூத்தான பயணம் கொடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.