இஸ்ரேல் Vs ஈரான் தீவிரம்: போர் நிறுத்தத்தை விட ‘மேலானதை’ நோக்கும் ட்ரம்ப் சொல்வது என்ன?
வாஷிங்டன்: இஸ்ரேல் - ஈரான் மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்ததை எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்த ஒன்றை எதிர்நோக்குகிறோம்" என்று கூறினார். அதற்கு, போர் நிறுத்தத்தை விட சிறந்தது எது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "உண்மையான முடிவு. போர் நிறுத்தம் அல்ல. முடிவு" என்று தெளிவுபடுத்தினார். ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உதவி குறித்து பேசிய ட்ரம்ப், "இப்போது, நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


