இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு

டெஹ்ரான்: இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்று அங்கு வசிக்​கும் இந்​திய மாணவர்​கள் வெளி​யேற தரைவழி எல்​லைகளை ஈரான் அரசு திறந்​துள்​ளது. ஈரான் - இஸ்​ரேல் இடையே தாக்​குதல் தீவிரமடைந்துள்ளது. இந்​நிலை​யில், ஈரானில் தற்​போது 4,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பாதிக்​கும் மேற்​பட்​டோர் மாணவர்​கள். ஈரானில் உள்ள பெரும்​பாலான இந்​திய மாணவர்​கள் ஜம்​மு-​காஷ்மீரை சேர்ந்​தவர்​கள்.

இந்​நிலை​யில் ஈரானில் படிக்​கும் மாணவர்​களை பாது​காப்​பாக வெளி​யேற்ற உதவு​மாறு ஈரான் அரசை, இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டதற்கு இணங்க, தங்​களது தரைவழி எல்​லைகளை திறந்​துள்​ள​தாக​வும், அதன் வழி​யாக மாணவர்​கள் பாது​காப்​பாக வெளி​யேறலாம் என்​றும் ஈரான் அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.