மொபைல் கவர் விற்பனை செய்துகொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி; ஜார்கண்ட் சிறுவனின் இன்ஸ்பையர் ஸ்டோரி!
மொபைல் கவர் விற்பனை செய்யும் சிறுவன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். எப்படி இதனைச் சாத்தியமாக்கினார் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளலாம்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற சிறுவன் தனது வாழ்வாதாரத்திற்காக மொபைல் போன் கவர்களை விற்பனை செய்து வருகிறார்.
இந்தச் சிறுவனின் தந்தை காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். ரோகித் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த பிறகு கல்லூரிப் படிப்பைப் பாதிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் அந்தச் சிறுவன் ஒரு மருந்து கடையில் வேலை செய்திருக்கிறார். அப்போது அவருக்கு மருத்துவத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.
இதனை அடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய அந்த சிறுவன் நீட் தேர்வுக்காகப் படித்து வந்துள்ளார்.
நாள் முழுவதும் போன் கவர் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்துவிட்டு, இரவில் படிப்பிற்காக நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்.
மீண்டும் காலை 7:00 மணிக்கு வேலைக்குச் சென்று இருக்கிறார். இவரின் அயராத உழைப்பின் காரணமாகத் தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
அந்தச் சிறுவன் நீட் 2025-ல் 549 மதிப்பெண்கள் பெற்று அகில இந்தியாவின் 12,484 மதிப்பெண்கள் பெற்றதாக லைவ் மின்ட் தெரிவித்துள்ளது
Physics Wallah நிறுவனர் அலக் பாண்டே, ரோகித்தைச் சந்தித்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பாண்டே ரோஹித்துக்கு ஒரு வெள்ளை கோட் பரிசளித்து, மருத்துவராக வேண்டும் என்ற அவரது கனவுகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.
Physics Wallah என்பது கல்வி தொழில்நுட்ப நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


