`அசல் தாஜ்மஹாலில் இருந்து நகலெடுத்து..! - தாஜ்மஹால் போன்று வீடு கட்டிய தொழிலதிபர் | viral video
52 வயதான இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மனைவிக்காக, தாஜ்மஹாலின் சிறிய நகலை வீடாகக் கட்டியுள்ளார்.
தாஜ்மஹாலின் நகல் போல் இருக்கும் அந்த வீட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள புர்ஹான்பூர் நகரில் தனது "காதல் நினைவுச்சின்னத்தை" கட்டியுள்ளார் அத்தொழிலதிபர். 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி வளாகத்தில் இந்த வீடு இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டில் நான்கு படுக்கை அறைகள், ஒரு தியான அறை, நூலகம் ஆகியவை உள்ளன.
மக்ரானா பளிங்கு கற்களைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலின் அசல் பரிமாணங்களின் மீட்டர் வடிவில் நகலெடுக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு அளவு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
இந்த வீட்டு கட்டுவதற்கு இரண்டு கோடி வரை செலவு செய்ததாகவும், காதல் சின்னம் வடிவில் கட்டப்பட்டுள்ளன இந்த வீடு மனைவிக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் தொழிலதிபர் கூறியிருக்கிறார்.
பள்ளி வளாகத்தில் இடம் பெற்றிருக்கும் தாஜ்மஹால் போன்ற இந்த வீடு பலரின் கவனத்தை பெற்று வருகிறது.
View this post on InstagramA post shared by Priyam Saraswat (@priyamsaraswat)
2013 ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது மனைவியின் நினைவாக தாஜ்மஹாலின் பிரதியை கட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


